நாட்டில் பல நிதி மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய 88 நிலுவையிலிருந்த பிடியாணைகளுக்கு உட்பட்ட நபர் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் வட்டுவை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நீண்டகாலமாக சட்டம் மற்றும் பொலிஸாரின் கவனத்திலிருந்து தப்பித்துவந்தார்.
அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், டிசம்பர் 11 மாலை, அத்துருகிரிய கஜப மாவத்த பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பலரிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவருக்கு எதிரான 88 பிடியாணைகளும்
- மொரட்டுவ,
- காலி,
- வராகபொல,
- பாணதுர
நீதவான் நீதிமன்றங்களால் வெளியிடப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Leave a Reply