அதேவேளை 6வது மற்றும் இறுதி தகுதி இடம் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ICC Olympics Qualifier தொடரின் மூலம் தீர்மானிக்கப்படும். இதன் மூலம் தற்போது முன்னணி அணிகளில் இல்லாத நாடுகளுக்கும் ஒலிம்பிக் மேடையை அடைய சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது.மகளிர் பிரிவில் நடைபெற்று வரும் ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2026 தொடரின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய அணிகள் ஏற்கனவே ஒலிம்பிக் தகுதியை உறுதி செய்துள்ளன. ஆண்கள் பிரிவில் நடைபெறவுள்ள ICC தொடர்கள் மற்றும் தரவரிசை முடிவுகள் மீதமுள்ள தகுதி பெற்ற அணிகளை தீர்மானிக்கவுள்ளன.
ICC தலைவர் ஜெய் ஷா ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது உலக கிரிக்கெட்டின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். இது புதிய நாடுகளில் கிரிக்கெட்டின் வரவேற்பை அதிகரிப்பதோடு உலகளாவிய ரசிகர் வட்டத்தையும் விரிவுபடுத்தும் என்று தெரிவித்துள்ளார்.2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் களம் காணவிருப்பது சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய நாடுகளுக்கு உலக அரங்கில் தங்களது திறமையை நிரூபிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.




























