September 11, 2026
Breaking News
குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம் செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம் செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு
முகப்பு News செய்தி
வெள்ளத்திற்குப் பிந்தைய தொற்று நோய் அபாயம் – நிபுணர் எச்சரிக்கை மற்றும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
News

அனர்த்தத்தின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அவதானம்

📅 வெளியீடு: 07 Dec 2025 13:56 🔄 புதுப்பிப்பு: 07 Dec 2025 13:56 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையில் கொதிக்க வைத்த நீரைப் பருகுவது மிகவும் முக்கியமானது என அப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண தெரிவித்தார்.

அத்துடன், குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் கிணறுகள் வெள்ள நீரால் நிரம்பி வழிந்திருந்தால், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்னர் முறையாகச் சுத்தம் செய்து, குளோரின் இட்டு தொற்று நீக்கம் செய்த பின்னரே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உணவின் மூலம் பரவக்கூடிய நோய்கள் குறித்துக் கவனமாக இருக்கையில், சமைத்த உணவுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுத்தமாக உணவைச் சமைப்பதுடன், வயிற்றுப்போக்கு போன்ற நோய் நிலைமைகளைக் கொண்ட ஒருவர் உணவு சமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்றும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

அத்துடன், உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் உண்ணும் நேரங்களைப் பொறுத்து உணவு நஞ்சாகக்கூடும் என்றும், அதற்கமைய உணவு சமைத்ததிலிருந்து 4 மணித்தியாலங்களுக்குள் உணவை உட்கொள்வது மிகவும் சிறந்தது என்றும், உணவருந்தும் முன் கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம் என்றும் விசேட வைத்திய நிபுணர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண,

“பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது, சேறு தேங்கியுள்ளது. இது எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழலாகும். எலிக்காய்ச்சல் என்று கூறினாலும், எலிகள் மட்டுமல்லாது நாய்கள், மாடுகள் மற்றும் பன்றிகளின் சிறுநீரிலிருந்தும் நீர் அசுத்தமடையக்கூடும். அந்த அசுத்தமான நீர் எமது உடலில் உள்ள வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் அல்லது காயங்கள் மூலமாகவும் உடலுக்குள் செல்லக்கூடும்.

வெள்ளப்பெருக்கிற்கு உள்ளான அனைத்து நபர்களுக்கும் வழங்குவதற்காக ‘டொக்ஸிசைக்ளின்’ (Doxycycline) எனும் மருந்தை நாம் விநியோகித்துள்ளோம். அந்த மருந்து வில்லைகளில் 200 மில்லிகிராமை உடனடியாக உட்கொள்ள வேண்டும். சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டாலோ அல்லது உங்கள் வீடு நீரில் மூழ்கியிருந்தாலோ, வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து இந்த மருந்தளவை உட்கொள்ளுங்கள்,” என்றார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் FIFA நிர்வாகம் தொடர்பான செய்தி
இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading