பிரான்ஸ் கேபிள் காரில் – 10 லட்சம் பயணிகள் கடந்து சாதனை.
பிரான்சின் இல்தெ-பிரான்ஸ் பகுதியில் இயங்கும் C1 எனப்படும் நகர கேபிள் கார் சேவை மிக வேகமாக மக்களிடம் பிரபலமடைந்து வருகிறது. 2025 டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த போக்குவரத்து சேவை Créteil மற்றும் Villeneuve-Saint-Georges நகரங்களை இணைக்கிறது.
தொடங்கிய சில மாதங்களிலேயே பிரான்ஸ் கேபிள் காரில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை (1 million) கடந்துள்ளதாக Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
இந்த C1 கேபிள் கார் ஐரோப்பாவின் நீளமான நகர கேபிள் போக்குவரத்து திட்டங்களில் ஒன்றாகும். மொத்தம் 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாதை Créteil, Limeil-Brévannes, Valenton மற்றும் Villeneuve-Saint-Georges பகுதிகளை இணைக்கிறது. சுமார் 18 நிமிடங்களில் பயணம் முடிவடையும் இந்த சேவை, முன்பு நீண்ட நேரம் எடுத்த பயணத்தை வேகமாக மாற்றியுள்ளது.
105 நவீன கேபின்களைக் கொண்ட இந்த சேவை தினசரி ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனளித்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் சுமார் 11,000 பயணிகள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு மேல் மக்கள் பயன்படுத்துவதால் இது வெற்றிகரமான போக்குவரத்து திட்டமாக கருதப்படுகிறது.
இந்த திட்டம் தெற்கு பாரிஸ் பகுதியிலுள்ள போக்குவரத்து வசதியை மேம்படுத்தி, மக்கள் வேலை, கல்வி மற்றும் தினசரி பயணங்களை எளிதாக்கும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது





Leave a Reply