முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, அவுஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை, இஸ்ரேலியர்களை கவர்ந்த சுற்றுலாத்தலமாக மாறியுள்ள நிலையில், அவர்களின் வருகை கணிசமாக அதிகரித்து வருகின்றது என்று அவர் குறிப்பிட்டார். இதனை கருத்தில் கொண்டு, நாட்டில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும், இலங்கையில் இஸ்லாத்தை அல்லது குரானை தடை செய்யும் முயற்சி மேற்கொள்ள முடியாது எனவும், ஆனால் முஸ்லிம் சமூகம் பூகோள அரசியல் தொடர்பாக தெளிவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முயற்சிகள் அவசியம் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.





Leave a Reply