பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2027, RN கட்சி முன்னிலையில்.
பிரான்சில் நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2027, வெளியான சமீபத்திய கருத்துக்கணிப்பில் வலதுசாரி கட்சியான Rassemblement National (RN) தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கருத்துக்கணிப்பின்படி RN வேட்பாளர் மற்ற முக்கிய அரசியல் போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக ஆதரவை பெற்றுள்ளார். குறிப்பாக மத்திய மற்றும் இடதுசாரி அரசியல் அணிகள் பல்வேறு வேட்பாளர்களாகப் பிரிந்திருப்பது RNக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும் தற்போதைய அரசியல் சூழலில் பிரான்ஸ் அரசியல் கட்சிகள் உட்கட்டமைப்பில் பிளவுகளும் ஒன்றுபட்ட வேட்பாளர் இல்லாமையும் காணப்படுவதால் RN கட்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
முன்னாள் அதிபர் வேட்பாளர் Marine Le Pen அல்லது மாற்று வேட்பாளராக கருதப்படும் Jordan Bardella ஆகியோரில் ஒருவர் இந்த முன்னிலைப் பலனைப் பெறக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனால் 2027 தேர்தலில் வலதுசாரி அரசியல் சக்திகள் முக்கிய பங்காற்றும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் பிரான்ஸ் அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.










Leave a Reply