காவல்துறை மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சுஜித் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட கொலை மற்றும் தற்கொலை உள்ளிட்ட சந்தேகங்களுக்கு இடமில்லை என்றும் குற்றச்செயல் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியாகியதையடுத்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவிய பல்வேறு ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


























