சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அரசாங்க உதவித்திட்டம் – குறைந்த வருமானம் கொண்டோரின் வாழக்கைத்தர மேம்பாடு.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நீடித்த முன்னேற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக ‘மெட்ரோ அப்லிஃப்ட்’ தேசியத் திட்டம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

கொலன்னாவ சலமுல்லாவில் அமைந்துள்ள ‘லக்ஷத சேவனா’ வீட்டுவசதி வளாகத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது முக்கிய நோக்கமாகும்.

அரசாங்க உதவித்திட்டம் மூலம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டியுள்ள வீட்டுவசதி வளாகங்களில் வசிப்போருக்குத் தேவையான பௌதீக மற்றும் சமூக சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான விழிப்புணர்வு பயிலரங்கம் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அமைச்சருமான எரங்கா குணசேகர தலைமையில் சேத்சிறிபாய இரண்டாம் கட்டத்தின் 11ஆம் மாடியில் உள்ள கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்றது.

2019ஆம் ஆண்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்ட கொலன்னாவ ‘லக்ஷத சேவனா’ அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மூன்று கட்டடங்களிலும் 1108 குடியிருப்பு அலகுகள் உள்ளன சுமார் 1,500 குடும்பங்கள் இதில் வசித்து வருகின்றனர்.

பௌதீக நவீனமயமாக்கல் பணிகளாக மின்தூக்கி பழுதுபார்த்தல், தீயணைப்பு அமைப்புகள் மேம்படுத்தல், சிறுவர் பூங்கா அபிவிருத்தி, கழிவு மேலாண்மை முறையாக்கம், பாதுகாப்பு வேலி அமைத்தல் மற்றும் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்திற்காக ரூபாய் 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading