இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள லால் கிலா (Red Fort) அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தது 8 பேர் உயிரிழந்து, 24 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சம்பவம் தொடர்பாக தகவல் பெற்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமருக்கு முழுமையான விளக்கமளித்ததாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அமித் ஷா, டெல்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வு துறை இயக்குநருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதுடன், தேசிய புலனாய்வு முகமை (NIA), தேசிய பாதுகாப்புக் காவல் படை (NSG) மற்றும் நுண்ணறிவு ஆய்வுத் துறை அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி விசாரணையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறியதாவது:
“இன்று மாலை சுமார் 6.52 மணியளவில், மெதுவாக வந்த கார் ஒன்று சிவப்பு விளக்கில் நின்றது. சில வினாடிகளில் அதில் வெடிப்பு ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. அனைத்து புலனாய்வு அமைப்புகளும், NIA, FSL குழுக்களும் இங்கு விசாரணையில் ஈடுபட்டுள்ளன. சிலர் உயிரிழந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.
சம்பவ இடம் முழுவதும் தற்போது பாதுகாப்பு வலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. வெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





Leave a Reply