சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை.

குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் இவ்வாறானதொரு பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர்.

சம்பளங்களை பெற்றுக் கொள்ளும் வேளையில் குறிப்பிட்ட சம்பளத்தை தவிர்த்து குறைக்கப்பட்டு வழங்கப்படும் சம்பளங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் எந்தவித அறிவின்மை காரணமாக கம்பெனியோடு வாதாட முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலாளி வர்க்கம் தங்களது நிறுவனம் அல்லது கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களை மிகவும் நுட்பமான முறையில் ஏமாற்றி அல்லது சமாளித்து வருகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு, தொழிலாளர்கள் நாட்டில் உள்ள கஷ்டத்தின் மத்தியில் அங்கு சென்று மிகவும் தங்களை வருத்தி உழைக்கின்ற பணத்தில் முதலாளி வர்க்கம் உறிஞ்சுகின்ற ஒவ்வொரு தொகையும் பெரியதோர் இழப்பாகவே தொழிலாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இப்படியான சூழலில் தொழிலாளர்களுக்கு தங்களது சம்பளங்கள் என்ன முறையில் அல்லது என்ன வகையில் கணிப்பிடப்படுகிறது குறிப்பாக வேலைக்கு வருகையின்மை காரணமாக எவ்வளவு நிறுவனத்தால் அல்லது கம்பெனியிலிருந்து கழிக்கப்படுகின்றது அல்லது மேலதிக நேரம் வேலை செய்ததற்காக எவ்வளவு கம்பெனிகள் கொடுக்கப்படுகிறது இதுபோன்று தகவல்கள் தெரிந்திருந்தால் இலகுவான முறையில் அவர்கள் ஒவ்வொருவரது சம்பளங்களை அறிந்து கொள்ள முடியும்.

அவ்வாறு அறிந்த பிற்பாடு அவர்களது சம்பளத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதை அடிப்படையாகக் கொண்டு கம்பெனியுடன் விவாதிக்க முடியும்.

சம்பளத்தை கணிப்பிடுவதற்கு

My Salary Calculation

மேலே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளி மூலம் விளக்கத்தை அறிந்து கொண்டு அதன் பின்னர் உங்களது சம்பளம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்