சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சர்வதேச மனித உரிமை அமைப்பான எம்.எஸ் இன்டர்நெஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சில தோட்டக் கம்பனிகளால் கொத்தடிமைகளைப் போன்று பயன்படுத்தப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பெருந்தோட்ட அமைச்சர் சமன்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொழில் அமைச்சும் பெருந்தோட்ட அமைச்சும் இணைந்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த அறிக்கையில் உள்ள விடயங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் விளக்கங்கள் அடங்கிய பதில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், வேலைநிலைகள் மற்றும் நலன்கள் தொடர்பான சர்வதேச மட்டக் கவலைகள் எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.


Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading