விமான நிலையத்தில் குழப்பம் – பயோமெட்ரிக் பதிவு தற்காலிகமாக நிறுத்தம்.
பெல்ஜியத்தில் புதிய ஐரோப்பிய ஒன்றிய (EU) Entry/Exit System (EES) நடைமுறைப்படுத்தப்பட்டபோது விமான நிலையங்களில் நீண்ட நேர காத்திருப்பு மற்றும் பயணிகள் சிரமம் ஏற்பட்டதால் பயோமெட்ரிக் தரவு (கைரேகை மற்றும் முகஅடையாள பதிவு) சேகரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
குறிப்பாக பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் குழப்பம் சோதனை நடைமுறைகளின் போது 3 மணி நேரம் வரை நீண்ட வரிசைகள் உருவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாமதங்களால் சில பயணிகள் விமானங்களை தவறவிட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
EU-வின் புதிய EES முறைமை Schengen பகுதிக்கு வரும் EU அல்லாத பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேற்ற தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய உருவாக்கப்பட்டது. இந்த முறையில் பயணிகள் பாஸ்போர்ட் முத்திரைக்கு பதிலாக கைரேகை மற்றும் முக ஸ்கேன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இது பாதுகாப்பை அதிகரிக்கவும் விசா காலவரம்பை மீறுவோரைக் கண்டறியவும் உதவும் என்று கூறப்படுகிறது.
ஆனால் பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட ஆரம்ப சோதனைகளில் ஒவ்வொரு பயணியையும் பதிவு செய்ய அதிக நேரம் எடுத்ததால் பயணிகள் வரிசை அதிகரித்து விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஈஸ்டர் விடுமுறை காலத்தில் அதிக பயணிகள் வருகை எதிர்பார்க்கப்பட்டதால் அதிகாரிகள் தற்காலிகமாக பயோமெட்ரிக் பதிவு கட்டாயத்தை ஒத்திவைக்க முடிவு செய்தனர்.
இந்த EES முறைமை முழுமையாக அமல்படுத்தப்படும் வரை சில நாடுகள் படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் நீண்ட வரிசைகள் போன்ற பிரச்சினைகள் காரணமாக தேவையான இடங்களில் தற்காலிக இடைநீக்கம் செய்யலாம் என EU அனுமதி வழங்கியுள்ளது.





Leave a Reply