September 11, 2026
Breaking News
ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு
முகப்பு News செய்தி
டக்ளஸ் தேவானந்தா கைது: அரசியல் களத்தில் அதிர்வலைகள், மௌனத்தில் தலைமைகள்
News

டக்ளஸ் தேவானந்தா கைது – அரசியல் களத்தில் அதிர்வலைகள் – மௌனத்தில் தலைமைகள்

📅 வெளியீடு: 30 Dec 2025 05:46 🔄 புதுப்பிப்பு: 30 Dec 2025 05:47 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

இலங்கை அரசியலில் நீண்டகாலம் அமைச்சராகவும், ஈ.பி.டி.பி (EPDP) கட்சியின் தலைவராகவும் விளங்கிய டக்ளஸ் தேவானந்தாவை, கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்தமை, உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2001 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட அரச ஆயுதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, அவை பாதாள உலகக் கும்பல் தலைவரான மாகந்துரே மதூஷின் வசம் இருந்தமை கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 20 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் காணாமல் போனமை தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கைது நடவடிக்கை தற்போதைய அரசியல் களத்தில், குறிப்பாக தமிழ் அரசியல் தரப்பில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இதனை நீதிக்கான ஒரு ஆரம்ப கட்டமாகப் பார்க்கின்றனர்.

அதேவேளை, ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள், இந்த கைது நடவடிக்கை அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா தொடர்பான விவகாரத்தில், ஏனைய அரசியல் தலைமைகள் பெரும்பாலும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கூடப் பெற முடியாமல் போனமை, டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளதை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், தற்போது அவர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், அவருக்காக வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதில் ஏனைய அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஆதாயம் இல்லை என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

இதனுடன், புதிய அரசியல் சூழலில் துணை இராணுவ பின்னணி கொண்ட ஒருவருடன் தங்களை இணைத்துக் கொள்வதில் அரசியல் தலைமைகள் தயக்கம் காட்டுவதுடன், இளைஞர்கள் மத்தியில் நிலவும் அரசியல் எதிர்ப்பும் அவர்களுக்கு ஆதரவளிப்பதைத் தடுக்கும் காரணியாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
விட்ரோலில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை சம்பவம்
பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை
11 Sep 2026
பிரான்ஸ் பொருளாதார வளர்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு
2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு
11 Sep 2026
பிரான்ஸ் நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் அரசியல் செய்தியாளர் சந்திப்பு
2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு
11 Sep 2026
பிரான்ஸ் நைஸ் நகரில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணை
நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில்
11 Sep 2026
பிரான்ஸில் வெயிலுடன் உயரும் வார இறுதி வெப்பநிலை
பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும்
11 Sep 2026
எட்கர் குரோஸ்பிரோன் பிரான்ஸ் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு
ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல்
11 Sep 2026
பாரிஸின் Porte Dorée பகுதியில் விபத்துக்குப் பிறகு டிராம் பாதையில் நின்ற கார்
பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை
11 Sep 2026
பிரான்ஸ் நீதிமன்றத்தில் Jean-Charles Preira கொலை வழக்கு தீர்ப்பு
இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு
11 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading