சட்டவிரோத எரிபொருள் விநியோகம் – கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எரிபொருள் விநியோக செயல்முறையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சமமாகவும் நியாயமாகவும் எரிபொருள் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து விற்பனை செய்தல் ஒழுங்கற்ற முறையில் விநியோகம் செய்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் அதற்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு சட்டவிரோத எரிபொருள் விநியோகத்தைப் பற்றிய தகவல்களை பொதுமக்கள் வழங்கும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, சட்டவிரோத எரிபொருள் விநியோகம் தொடர்பான முறைகேடுகள் குறித்து அறிந்த பொதுமக்கள் 0112106767 மற்றும் 0117296130 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் நிலைநிறுத்துவதற்கு இந்த முயற்சி முக்கிய பங்காற்றும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





Leave a Reply