சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கையில் இன்று முதல் QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம்.

QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னர் QR குறியீட்டை பெற்றுள்ள மற்றும் தற்போது அதே வாகனமும் அதே தொலைபேசி இலக்கத்தையும் பயன்படுத்தும் நபர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்களின் QR குறியீட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் இதற்காக சம்பந்தப்பட்ட ஆன்லைன் அமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் பழைய பதிவுகளை பயன்படுத்தி விரைவாக புதுப்பிப்பு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாகனங்களை மாற்றியவர்கள் புதிய வாகனங்களை வாங்கியவர்கள் அல்லது தங்களது தொலைபேசி இலக்கங்களை மாற்றியவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்

பலர் தங்களது புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியாமல் அல்லது QR குறியீடு பெறுவதில் சிரமம் எதிர்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பிரச்சினைகளை விரைவாக தீர்க்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் என்பதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக தொடர்புடைய அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் துறைகள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொதுச் சேவைகளை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை முன்னுரிமையுடன் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்மானங்களின் அடிப்படையில் இன்று நாளுக்குள்ளேயே சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். QR குறியீட்டு முறைமையை மேலும் சீரமைத்து பொதுமக்களுக்கு எளிதான மற்றும் விரைவான சேவையை வழங்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading