சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

தற்போதைய அரசாங்கத்தின் 06 அமைச்சர்களுக்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை தொடங்க இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவர் மற்றும் ஒரு பிரதி அமைச்சருக்கு எதிராக சொத்துக்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜெயக்கொடி, சுனில் ஹந்துன்னெத்தி, நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக இந்த விசாரணைகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கூறுகிறது.

ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு ஜமுனி கமந்த துஷார நாளை செவ்வாய்க்கிழமை (30) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்