யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபை செயலாளருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
இக்குற்றச்சாட்டுகள் இன்று (24) நடைபெற்ற பருத்தித்துறை நகரசபையின் விசேட அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் தெரிவிக்கையில், பருத்தித்துறை மரக்கறி சந்தை புதிய சந்தை தொகுதியிலிருந்து மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றப்பட்டிருந்த போதும், அங்கு வியாபாரிகளிடமிருந்து உரிய வரி அறவிடப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும், புதிய சந்தை அமைப்பதற்காக காணி கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





Leave a Reply