இலங்கை சுங்கத் திணைக்களம் தனது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் மிக அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி, சுங்கத் திணைக்களம் Rs. 24,918 மில்லியன் வருமானத்தைச் சேகரித்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
அதே சமயம், இந்த ஆண்டின் ஜனவரி முதல் 15 அக்டோபர் வரை மொத்தம் Rs. 1,867 பில்லியன் வருமானம் திரட்டப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமான இலக்கு Rs. 2,115 பில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய வருவாய் நிலவரத்தின் அடிப்படையில் அந்த இலக்கை எளிதில் அடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களம் கடந்த செப்டம்பர் மாதத்திலும் தன் மாதாந்திர இலக்கை 37 % அளவில் மீறி வருமானம் ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வருமான இலக்கை மட்டுமின்றி அதைவிட அதிகமாகவும் 2025 ஆண்டு முடிவுக்கு முன்னர் திரட்ட முடியும் என சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.





Leave a Reply