2026 ஜனவரி 1 முதல் பிரான்சில் வாகன தொழில்நுட்ப பரிசோதனை விதிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. 2025 டிசம்பர் 8 அன்று வெளியிடப்பட்ட உத்தரவின் படி இன்னும் “கடுமையான ரீகால்” பிரச்சினைகளில் உள்ளதும் குறிப்பாக ஆபத்தான டகட்டா (Takata) ஏர்பேக்குகள் மாற்றப்படாமல் இருக்கும் வாகனங்களுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெடிக்கும் ஆபத்து அதிகமாக இருப்பதால் உலகளவில் பல விபத்துகள் ஏற்பட்டு வந்த டகட்டா ஏர்பேக்குகள் பிரான்சில் “Stop Drive” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் பழுது பார்க்கப்படாமல் சாலையில் இயக்கப்படுவது மிகப்பெரிய பாதுகாப்பு ஆபத்தாக இருப்பதை அரசு வலியுறுத்தியுள்ளது. புதிய விதிப்படி, இத்தகைய ஆபத்தான ஏர்பேக்குகள் கொண்ட வாகனங்கள் தொழில்நுட்ப பரிசோதனைக்கு சென்றவுடன் தானாகவே ‘பின் பரிசோதனை’ (follow-up inspection) பிரிவில் சேர்க்கப்படுகின்றன.

பழுதுபார்ப்பு உற்பத்தியாளர் அங்கீகரித்த டீலரிடம் செய்யப்பட வேண்டும் பழுதுபார்க்கும் வரை வாகனத்தை ஓட்ட அனுமதி இல்லை பழுது பார்த்த பிறகு மட்டுமே வாகன பரிசோதனை செல்லுபடியாகும். இதன்மூலம் இன்னும் ஆபத்தான ஏர்பேக்குகள் உள்ள வாகனங்களை கண்டறிந்து சாலையிலிருந்து உடனே நீக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

டகட்டா ஏர்பேக்குகள் தவிர்ந்த மற்ற “கடுமையான” ரீகால் பிரச்சினைகள் இருந்தாலும் வாகன பரிசோதனை அறிக்கையில் அது குறிப்பிடப்படும் மற்றும் உரிமையாளர்கள் தங்களது கார் பிராண்டின் கேரேஜை தொடர்பு கொண்டு பழுது பார்க்க அறிவுறுத்தப்படுவார்கள் ஆனால் அவை “Stop Drive” அல்லாததால், வாகன ஓட்டத்திற்கு தடை இல்லை. பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக இந்த புதிய விதிமுறையை போக்குவரத்து அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading