சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

நாட்டில் TIN பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 40 இலட்சம் பேர் இன்னும் வரி அடையாள எண் (TIN) பெறாமல் இருப்பதாக உள்நாட்டு வரி திணைக்களம் (IRD) தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி இதுவரை 1.3 கோடி பேருக்கு TIN வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் TIN பதிவு கட்டாயம் என்பதால் மொத்தம் சுமார் 1.7 கோடி பேர் பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதன் அடிப்படையில் இன்னும் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் பதிவு செய்யாமல் இருப்பது கவலைக்கிடமான நிலையாக பார்க்கப்படுகிறது.இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு வரி (திருத்தம்) சட்டமூலம் இலக்கம் 11ன் கீழ் பல முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி வங்கி கணக்குகள் திறத்தல் வாகன பதிவு மற்றும் புதுப்பித்தல், வணிக பதிவு, நிறுவன பங்குகள் மாற்றம் மற்றும் கடன் அட்டைகள் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு TIN அவசியமாக்கப்பட்டுள்ளது.புதிய விதிகளின்படி TIN இனி இரகசிய தகவலாக கருதப்படாது என்றும் உள்நாட்டு வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி அமைப்பை வலுப்படுத்தவும் பதிவு இல்லாதவர்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்