சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) மூத்த துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த நியமனம் கட்சியின் எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட உள்ளதாக கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சுற்றியிருந்த நீண்டகால சட்டப்பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கலந்துரையாடலின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர விஜயதாச ராஜபக்ஷவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில், கட்சியுடன் தொடர்புடைய ஆறு நீதிமன்ற வழக்குகளை விஜயதாச ராஜபக்ஷ வாபஸ் பெற்றுள்ளதாகவும், எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, விஜயதாச ராஜபக்ஷ ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவராகவும், மகரகம தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading