மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், அரசால் நிதியளிக்கப்படும் அகதி விடுதியில் தங்கியிருந்த இலங்கை குடியேறிய ஒருவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
யாசின் ஹிமாசரா (20) என்பவர், HMP Wormwood Scrubs சிறையிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் Isleworth Crown Court நீதிமன்றத்தில் முன்னிலையானார். சிங்கள மொழி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் தனது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திய பின்னர், அவர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
இந்த வழக்கில், கடத்தல், பாலியல் பலாத்காரம், உட்புகும் தாக்குதல், தாக்குதல், சிறாருடன் பாலியல் உறவு, மற்றும் திட்டமிட்ட கழுத்து நெரித்தல் என மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் ஹிமாசரா மீது சுமத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் அவர் “குற்றமில்லை” (Not Guilty) என மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளின்படி, இந்த சம்பவம் கடந்த நவம்பர் 1 ஆம் திகதி Feltham பகுதியில் இடம்பெற்றதாகவும், குறித்த காலப்பகுதியில் ஹிமாசரா, அகதிகளை தங்கவைக்கும் அரசுப் பயன்பாட்டு மூன்று நட்சத்திர St Giles Hotel-இல் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர் போஸ்சி ஷெஃபி, ஹிமாசராவிற்கு ஆங்கில மொழி அறிவு குறைவாக இருப்பதால், முழு விசாரணை காலத்திலும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படும் என நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி க்வாமே இன்யுண்டோ, ஹிமாசராவை தொடர்ந்தும் காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவித்தார்.





Leave a Reply