ஈரான் சிறைகளில் பாலியல் வன்முறை, மனித உரிமை அமைப்புகள் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு
ஈரானின் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை கடுமையான சித்திரவதை மற்றும் உளவியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கைதிகள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் மூலம் இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
“மினா” என அடையாளம் மறைக்கப்பட்ட முன்னாள் பெண் கைதி ஒருவர் விசாரணையின் போது மத நூலால் தாக்கப்பட்டதாகவும் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் தொலைக்காட்சியில் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக என் 12 வயது மகனை பயன்படுத்துவோம் என்று மிரட்டினர் என கூறியுள்ளார்.
Amnesty International மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான கைதிகள் பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில சம்பவங்கள் 1980களிலிருந்தே நடைபெற்று வருவதாக முன்னாள் அரசியல் கைதிகள் கூறுகின்றனர்.
மேலும் ஈரானில் மரண தண்டனை கைதிகளிடம் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் பெற உடல் மற்றும் உளவியல் சித்திரவதை பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. சில குடும்பங்கள் கைதிகளின் இறுதி சந்திப்பு கூட மறுக்கப்பட்டதாக கூறியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அதிகாரிகள் முற்றிலும் மறுத்துவருகின்றனர். இருப்பினும் ஐ.நா. Amnesty International மற்றும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.





Leave a Reply