அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைக்கு தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு தலையீடுகள் இடையூறாக மட்டுமே அமையும் என்றும் இதனால் மக்களிடையே பிளவு ஏற்படும் அபாயமும் உண்டு. ஆகவே சர்வதேச நடவடிக்கைகள் குறித்த உயர் ஆணையரின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை அரசு ஏற்கவில்லை என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், இன, மத, தரம், சாதி பேதங்களின்றி மக்களின் பல்துறை வேறுபாட்டை மதித்து கொண்டாடும் ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான உண்மையான அக்கறையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இலங்கையில் இனவாதம் அல்லது தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

































