பிரான்சில் இந்த ஆண்டு சொத்து வரி (Taxe foncière) மீண்டும் அதிகரிக்க உள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் சுமார் 3 கோடி வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரி அறிவிப்புகளைப் பெற உள்ளனர்.
2023-இல் 7.1%, 2024-இல் 3.9% மற்றும் 2025-இல் 1.7% என தொடர்ச்சியான உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த தேசிய அளவிலான அதிகரிப்பு பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காடாஸ்ட்ரல் வாடகை மதிப்பீட்டின் திருத்தத்தால் ஏற்பட்டது.
மேலும் உள்ளூர் நிர்வாகங்கள் வாக்கெடுப்பின் மூலம் கூடுதல் விகிதங்களை நிர்ணயிக்கலாம் என்பதால் பல குடும்பங்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது. எனினும் வீட்டு உரிமையாளர்களுக்கு முறையீடு செய்யும் வாய்ப்பு உண்டு.
சொத்து விவரங்களில் பிழைகள், தவறான கணக்கீடு, அல்லது வீட்டு நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற காரணங்களால் réclamation (அதிகாரப்பூர்வ முறையீடு) செய்யலாம்.
ஆனால் முக்கியமாக முதலில் வரியை காலவரையறைக்குள் செலுத்த வேண்டும் இல்லையெனில் 10% அபராதம் விதிக்கப்படும். அதன் பின்னர் மட்டுமே முறையீடு செய்ய முடியும். பொதுவாக அறிவிப்பு கிடைத்த ஆண்டின் அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை முறையீடு செய்யலாம் (உதாரணம்: 2025 பில் என்றால் 2026 டிசம்பர் 31 வரை).
முறையீட்டை impots.gouv.fr தளத்தின் மூலம் ஆன்லைனில் அல்லது உள்ளூர் வரித்துறை அலுவலகத்திற்கு பதிவு செய்யப்பட்ட கடிதம் மூலம் அனுப்பலாம். முறையீடு வெற்றிகரமாக இருந்தால் அதிகமாக செலுத்திய தொகை திருப்பி வழங்கப்படும்.





Leave a Reply