சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்ஸ் நாட்டில் அக்டோபர் மாதம் வழக்கமாகவே பல்வேறு வரி மற்றும் நிதி கட்டணங்களால் நிரம்பிய முக்கியமான காலமாகும்.

இவ்வாண்டும் அதற்கு விதிவிலக்கில்லை. குறிப்பாக அக்டோபர் 27 தேதி வரித்தாரர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். அந்த நாளில் சில வரித்தாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு தனித்தனி வரி பிடிப்புகள் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

பிரான்ஸ் வரித்துறை (DGFiP) தெரிவித்ததின்படி அந்த நாளில் வருமான வரி (Impôt sur le revenu) மற்றும் வசிப்பிட வரி (Taxe d’habitation) அல்லது சொத்து வரி (Taxe foncière) ஆகியவற்றுக்கான தொகைகள் ஒரே நாளில் பிடிக்கப்படலாம்.

குறிப்பாக தானியங்கி பிடிப்பு முறையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இது பொருந்தும். இதனால் வங்கிக் கணக்கில் போதுமான நிதி இல்லையெனில் பிடிப்பு தோல்வி வங்கி நிராகரிப்பு கட்டணங்கள் அல்லது தாமதப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால், வரித்தாரர்கள் தங்களின் impots.gouv.fr ஆன்லைன் கணக்கில் உள்நுழைந்து பிடிப்பு தேதிகள் மற்றும் தொகைகளை சரிபார்க்கவும், கணக்கில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்யவும்,

தேவையானால் வரித்துறையுடன் முன்கூட்டியே தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது. பிரான்ஸ் அரசு இந்த இரட்டை பிடிப்பு குறித்து வரித்தாரர்கள் முன்கூட்டியே விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது. இது தேவையற்ற நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கவும் தாமதமின்றி கட்டணங்களை செலுத்தவும் உதவும்.

இரண்டு முக்கிய வரி பிடிப்புகள்

  1. வருமான வரி (Impôt sur le revenu) — ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய வரி தொகை, மாதாந்திரமாக அல்லது தவணை முறையில் பிடிக்கப்பட்டு வரும் தொகை.
  2. வசிப்பிட வரி (Taxe d’habitation) / சொத்து வரி (Taxe foncière) — வீட்டு வசிப்பிடத்திற்கான அல்லது சொத்து வைத்திருப்பதற்கான வருடாந்திர கட்டணம்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading