பிரான்ஸ் பொருளாதார அமைச்சகம் குடியிருப்புகளில் காணப்படும் ஆறு முக்கிய வசதி அம்சங்களை (Comfort Features) வீட்டு பதிவுகளில் சேர்த்து புதுப்பித்துள்ளது. இந்த மாற்றம் 2026 ஆம் ஆண்டு 7.4 மில்லியன் வீடுகளின் சொத்து வரி உயர்வுக்கு காரணமாகும்.
சொத்து வரி கணக்கில் சேர்க்கப்படும் ஆறு வசதிகள்
- தண்ணீர்
- மின்சாரம்
- குளியல் தொட்டி
- ஷவர்
- சிங்க்
- கழிப்பறை
- வெப்பமாக்கல் அல்லது ஏர் கண்டிஷனிங்
ஒரு குடியிருப்பில் இந்த வசதிகள் இருந்தால் அவை ஒவ்வொன்றும் “சதுர மீட்டராக” மாற்றி வீட்டின் மொத்த பரப்பளவுடன் சேர்த்துக் கொண்டு வரி விதிக்கக்கூடிய தளப்பரப்பை நிர்ணயிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வசதிக்கும் சேர்க்கப்படும் கூடுதல் பரப்பளவு
- சிங்க் — 3 m²
- மத்திய வெப்பமாக்கல் — 2 m²
- குளியல் தொட்டி — 5.5 m²
- மின்சாரம் — 2 m²
- ஓடும் நீர் — 4 m²
DGFiP (பிரெஞ்சு பொது நிதி இயக்குநரகம்) தெரிவிப்பதாவது பல வீடுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரப்பூர்வ மதிப்பீடு புதுப்பிக்கப்படாமல் இருந்ததால் இந்த திருத்தம் அவசியமானதாகும்.
ஒரு வீட்டுக்கு சராசரியாக €63 வரி உயர்வு மொத்தம் 7.4 மில்லியன் வீடுகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன இது பெருநகர பிரான்சில் உள்ள வீடுகளின் 25% அடுக்குமாடி குடியிருப்புகளின் 15% ஆகும்.
Le Parisien தகவலின்படி இந்த மாற்றத்தால் உள்ளூர் நிர்வாகங்களுக்கு ஆண்டு தோறும் €466 மில்லியன் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
ஒரு வீட்டுக்கு சராசரியாக €63 வரி அதிகரிக்கும். ஒரு சொத்தில் இந்த வசதிகள் உண்மையில் இல்லையெனில் சொத்து உரிமையாளர்கள் மதிப்பீட்டை எதிர்த்து வரி நிவாரணம் பெறலாம் என்று DGFiP உறுதியளித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு பொதுமையான கடிதம் அனுப்பப்படும்.





Leave a Reply