சிங்கள மொழியில் மாத்திரம் சமூக ஊடக சேவைகளை மேற்கொள்ளும் இலங்கை காவல்துறையினர்.
🔴 தமிழ், முஸ்லிம் மக்களின் கவலைக்கு செவிசாய்க்க வேண்டிய நேரம்!
இலங்கையின் காவல்துறையினர் தங்களது உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவுகள் மேற்கொள்ளும் போது பெரும்பாலும் சிங்கள மொழியில் மட்டும்தான் தகவல்களை வெளியிடுகின்றனர்.
இதனால், சிங்கள மொழி தெரியாத சிறுபான்மை இனத்தவரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் அந்த அறிவிப்புகளை, எச்சரிக்கைகளை அல்லது விளக்கங்களை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நாட்டின் மூவின மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என அரசும் ஜனாதிபதியும் பலமுறை வலியுறுத்தியுள்ள நிலையில், பாதுகாப்புத் துறையான காவல்துறை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் என்பது எங்களது நியாயமான எதிர்பார்ப்பு.
எனவே, அரசு அதிகாரப்பூர்வப் பக்கங்களில் (Facebook போன்றவை) பதிவிடப்படும் அனைத்து அறிவிப்புகளும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் ஆகும்.
இது போன்ற ஒரு மாற்றம் மூவின மக்களுக்கிடையே நம்பிக்கையை உருவாக்கும் மற்றும் இணக்கத்தையும் மேம்படுத்தும்.



இந்தக் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி அவர்களும், பொலிஸ்மா அதிபரும் கவனத்தில் எடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்தாள் மொழி சமத்துவம் ஒன்று உருவாக்கப்பட்டு முவீன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சூழலும் அங்கு உருவாக இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.
இலங்கையின் காவல்துறையினரின் சமூக வலைதள மற்றும் உத்தியோபூர்வ இணையதள இணைப்புகள்.
- இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/sri_lanka_police
- யூடியூப்: https://www.youtube.com/@Sri_Lanka_police
- டிக்டொக்: https://www.tiktok.com/@sri_lanka_police
- எக்ஸ் / ட்விட்டர்: https://twitter.com/SL_PoliceMedia
- உத்தியோபூர்வ இணையதளம்: https://www.police.lk





Leave a Reply