சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அம்பாறை மாவட்டத்தின் வலஸ்முல்லைப் பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக அண்ணனை தம்பி தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (01.06.2026) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இரண்டு சகோதரர்களுக்கும் இடையே நீண்டகாலமாக காணித் தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, அண்ணன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய தம்பியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்