சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அரலங்கவில – கண்டேகம பகுதியில் தந்தையோடு முகம் கழுவச் சென்ற இரண்டு வயது சிறுவன் நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று(20.12.2025) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அகில கிருஷன் கவிந்த என்ற இரண்டு வயது சிறுவனே இவ்வாறு நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

பொலிஸார் விசாரணை 

நேற்றையதினம் காலை வீட்டிற்கு வெளியே இருந்த தந்தையுடன் முகம் கழுவச் செல்வதாக இந்த சிறுவன் சொல்லிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, முகம் கழுவிவிட்டு  வீட்டிற்கு வந்த தந்தை தனது இளைய மகன் குறித்து  கேட்டபோது,  தந்தையத் தேடி மகன் சென்றது தொடர்பில் தெரிவித்தவுடன் சிறுவனை தேடும் நடவடிக்கையில் வீட்டினர் ஈடுபட்டனர்.

 இதன்படி, உயிரிழந்த சிறுவனின் சகோதரி, தமது வீட்டின் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றினுள்  விழுந்து கிடப்பதை கண்டு வீட்டின் ஏனையோருக்கு அறிவித்துள்ளார். 

குறித்த குழிக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்