மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக வங்கி அல்லது அரச நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி போலி தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இந்த தகவல்களை நம்பி வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP எண்களை பகிரும் நபர்கள் பெரும் நிதி இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக மத்திய வங்கி எச்சரித்துள்ளது.Sri Lankan News,
எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செய்தி அல்லது அழைப்பையும் உடனடியாக நம்பாமல் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனிப்பட்ட வங்கி தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக வங்கிக்கும் காவல்துறைக்கும் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களின் அவசர உணர்வை பயன்படுத்தி நடைபெறும் இந்த ஆன்லைன் மோசடி முயற்சிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு என இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.































