இந்நிலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மண்டேப் நீரிணையை மையமாகக் கொண்ட புதிய பிராந்திய பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கொள்கையை ஈரானிய தலைமை வடிவமைத்து வருவதாகவும் தற்போதைய அரசாங்கம் எதிர்ப்பை எதிர்கொள்வதை விட தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவு வழங்குவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் பின்னணியில் லெபனானின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் ஈரானின் தற்போதைய வெளிநாட்டு கொள்கை முன்னுரிமைகளில் முக்கிய இடம் வகிப்பதாக முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.


































