சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சு புதிய WhatsApp புகார் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சுற்றுச்சூழல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை நேரடியாக அமைச்சுக்கு அனுப்ப பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

”A Sustainable Biosphere, An Evergreen Life” என்ற நோக்கத்தின் கீழ் அறிமுகமான இந்த சேவையின் மூலம் சட்டவிரோத சுற்றுச்சூழல் அழிப்பு, குப்பை கொட்டுதல், மரவெட்டல், இயற்கை வளங்களுக்கு ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட புகார்களை புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் WhatsApp இலக்கம் 070 250 950 9 க்கு அனுப்ப முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய யோசனைகள், மக்கள் கருத்துகள் மற்றும் கொள்கை தொடர்பான பரிந்துரைகளையும் இதே WhatsApp சேவையின் மூலம் பகிர முடியும். இதன் மூலம் புகார்களுக்கு விரைவான நடவடிக்கை எடுப்பதுடன் வெளிப்படையான மற்றும் மக்கள் பங்கேற்பு கொண்ட நிர்வாகத்தை உருவாக்குவதே அமைச்சின் நோக்கமாகும்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்