சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

2024 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசிய சுகாதார காப்பீட்டு நிறுவனம் (Assurance Maladie) போலி நோய்விடுப்பு சான்றிதழ்களின் மூலம் ஏற்பட்ட நிதி இழப்புகள் 30 மில்லியன் யூரோவுக்கு மேல் இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 8 மில்லியன் யூரோ இழப்பை விட அதிகம். சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் போலி நோய்விடுப்பு சான்றிதழ்கள் விற்பனை செய்யப்படுவது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த முறைகளை எதிர்கொள்ள புதிய Cerfa நோய்விடுப்பு அறிவிப்பு படிவம் சுகாதார காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 2025 செப்டம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. அதனால் இந்த புதிய முறையை பயன்படுத்துவதன் மூலமே அவர்களது அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும் அத்தோடு அவை பாதுகாப்பாக அமையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய காகிதப் படிவம் சில நிலைகளில் கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும் (உதாரணமாக, வீட்டு பார்வைகள்), இது போலி படிவங்களை உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பானது. இதில் அடங்கும் பாதுகாப்பு அம்சங்கள்:

  • விசேஷ காகிதம்
  • ஹோலோகிராபிக் லேபல்
  • காந்த அச்சு (Magnetic Ink)
  • மருத்துவ ஆலோசகரின் அடையாள விவரங்கள்

இந்த படிவத்தை amelipro மூலம் ஆர்டர் செய்யலாம்.


அனைத்து காகித நோய்விடுப்பு சான்றிதழ்களுக்கும் புதிய Cerfa படிவத்தை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். மருந்தளிப்பு மென்பொருளில் இருந்து உருவாக்கப்பட்ட அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட படிவங்கள், ஸ்கேன் அல்லது புகைப்பட எடுக்கப்பட்ட சான்றிதழ்கள் சுகாதார காப்பீட்டால் ஏற்கப்படாது.

மிகவும் பாதுகாப்பான முறையாக நோய்விடுப்பு அறிவிப்புகளை அனுப்ப எலெக்ட்ரானிக் மூலம் amelipro பயன்படுத்துவதை சுகாதார காப்பீட்டு நிறுவனம் பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்