சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Jaffna Tamil News, யாழ்ப்பாணத்தில் நான்கு பேரை வாளால் தாக்கிய வழக்கில் தேடப்பட்ட ஆவா குழு உறுப்பினர் லிக்சாந் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கிராமத்திலும் பண்ணை பிரதேசத்திலும் மொத்தமாக நான்கு பேரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆவா குழு உறுப்பினராகக் கூறப்படும் படையப்பா என அழைக்கப்படும் லிக்சாந் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் அதுவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சிலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மூலம் திடீர் பணக்காரர்களாக மாறுவதற்காகவும் கோவில் நிர்வாகங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வன்முறை கும்பல்களுடன் இணைத்துவிடுவதாக உள்ளூர் தரப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள லிக்சாந் மற்றும் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு ஆபத்தான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 19 வயதான கனி போன்ற இளைஞர்கள் இவ்வாறான வன்முறைச் சூழலால் தங்கள் வாழ்க்கையை இழந்து வருவதாக அவர்களின் நெருங்கிய உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.Jaffna Tamil News

இளைஞர்கள் குற்றச்செயல்களில் சிக்குவதற்கு பின்னால் செயல்படும் நபர்கள் மீதும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்