சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கடவத்தை – இஹல பியன்வில பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி 54 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவராகவும் தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்பட்ட மோதலின் போது இரண்டு நபர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவருடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 54 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரை கடவத்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் தப்பிச் சென்றுள்ள மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்