சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மஹரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடைபெறவுள்ளது. இச்சம்பவம் ஒரு கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading