மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களின் இயக்கம் மெதுவாக மீண்டும் தொடங்கியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. கத்தாரில் இருந்து LNG ஏற்றிச் சென்ற “Fuwairit” என்ற கப்பல் தற்போது பாகிஸ்தானை நோக்கிப் பயணிக்கிறது அதேவேளை ஈராக் பஸ்ரா கச்சா எண்ணெய் ஏற்றிய “Eagle Verona” என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பல் சீனாவை நோக்கி வளைகுடாவை விட்டு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் கடந்த சில மாதங்களாக ஹோர்முஸ் நீரிணை வழிப் போக்குவரத்து கடுமையாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது சில கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உலகின் எண்ணெய் மற்றும் LNG விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் இந்த கடல் பாதையில் முன்பு தினமும் 125 முதல் 140 கப்பல்கள் வரை பயணித்த நிலையில் தற்போது இயக்கம் மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும் அண்மைய கப்பல் நகர்வுகள் உலக எரிசக்தி சந்தைக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன ஆனால் பாதுகாப்பு அபாயங்களும் அரசியல் பதற்றங்களும் இன்னும் நீடிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





Leave a Reply