சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஜனநாயகத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடியாக தலையிட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சேர் பெறுமதி வரி (VAT) திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்தார்.

மேல்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை கடந்த ஆறு மாதங்களாக நிரப்பாதது நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் செயலாக இருப்பதாகவும் அவர் கூறினார். நீதித்துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் தனிநபர் தேவைகளுக்காக அல்லாமல் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்