September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
முகப்பு News செய்தி
உடல் பிடிப்பு நிலையங்கள் மீது பொலிஸ் அதிகார துஷ்பிரயோகம்
News

உடல் பிடிப்பு நிலையங்கள் மீது பொலிஸ் அதிகார துஷ்பிரயோகம்

📅 வெளியீடு: 04 Jul 2026 20:20 🔄 புதுப்பிப்பு: 04 Jul 2026 20:20 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பயிற்சிச் சான்றிதழ்களுடன் இயங்கி வரும் உடல் பிடிப்பு நிலையங்கள் (ஸ்பா) மீது பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வருவதாக இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் சுற்றிவளைப்புகள் பெண் ஊழியர்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் சங்கத் தலைவருக்குச் சொந்தமான நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சங்கத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் எழுத்துமூல முறைப்பாடுகளை வெள்ளிக்கிழமை (03) கையளித்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் சுமேத பெரேரா சுற்றுலா அமைச்சின் உரிமங்களுடனும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிச் சான்றிதழ்களுடனும் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் இந்த நிறுவனங்கள் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் வருபவை அல்ல என்றும் இத்தகைய சோதனைகள் சுற்றுலா சபை அதிகாரிகளுடன் இணைந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நலின் குமார அண்மையில் தலவத்துகொட சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வழியாக வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாகவும் அதன் பின்னர் வத்தளை பகுதியில் சங்கத் தலைவருக்குச் சொந்தமான நிறுவனம் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தத் துறையை நம்பி சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்வாதாரம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விரிவான மற்றும் சுயாதீன விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading