சம்பவத்தின் போது தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் எந்த உயிரிழப்பும் அல்லது காயங்களும் பதிவாகவில்லை.தகவல் கிடைத்தவுடன் காலி மாநகர சபை தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன. பல மணி நேர முயற்சியின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வதுரவிலா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து காரணமாக தொழிற்சாலையின் பெரும் பகுதி ஏற்கனவே முழுமையாக சேதமடைந்திருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




























