2026 ஆம் ஆண்டுக்கான NEET தேர்வைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்புகள் பல மாணவர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதேபோன்று நாடு முழுவதும் பல தேர்வர்கள் உயிரிழந்த சம்பவங்களும் அண்மையில் பதிவாகியுள்ளன. கல்வி நிபுணர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்கள் அழுத்தத்தை சமாளிக்க மாணவர்களுக்கு போதிய மனநல ஆதரவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் NEET தேர்வுக்கு எதிரான விவாதங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் கோபிகாவின் மரணம் மீண்டும் அந்த விவகாரத்தை அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் முன்னிலைப்படுத்தியுள்ளது. மாணவர்களின் உயிரையும் மனநலத்தையும் பாதுகாக்கும் வகையில் கல்வி அமைப்பில் மாற்றங்கள் தேவை என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
































