அரச சேவைகளை நவீனமயமாக்கி பொதுமக்களுக்கு விரைவான மற்றும் திறன் வாய்ந்த சேவைகளை வழங்கும் நோக்கில் “Public Impact Champions Network (PIC-NET)” திட்டத்திற்காக 400 அரச அதிகாரிகளை “டிஜிட்டல் சாம்பியன்கள்” ஆகத் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சியின் மூலம் பல்வேறு அரச நிறுவனங்களில் தொழில்நுட்ப பயன்பாடு சேவை திறன் நிர்வாக மாற்றம் மற்றும் செயல்முறை மேம்பாட்டை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய தெரிவித்ததாவது எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் பெரியளவிலான தொழில்நுட்ப மாற்றம் ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என கூறினார். தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் சிறப்பு பயிற்சிகள் வழிகாட்டல் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வுகளின் மூலம் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கும் தலைவர்களாக உருவாக்கப்படவுள்ளனர். இந்தத் திட்டம் அரச சேவைகளை மக்கள் மையப்படுத்தி மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.





Leave a Reply