இலங்கை வங்கியின் (Bank of Ceylon) டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தவும், நிதி துறையில் போட்டித்திறனை நிலைநிறுத்தவும் புதிய தகவல் தொழில்நுட்ப துணை நிறுவனம் ஒன்றை அமைக்கும் முன்மொழிவு அமைச்சரவையால் ஒப்புதல் பெற்றுள்ளது.
புதிய நிறுவனம் “BOC IT Solutions (Pvt) Ltd” என அழைக்கப்படவுள்ளது. இது இலங்கை வங்கியின் முழுமையான இணை நிறுவனம் (fully affiliated institute) ஆக செயல்பட்டு, வங்கியின் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்தவும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வுகளை வழங்கவும் பொறுப்பேற்கும்.
இந்த முன்மொழிவு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
இத்திட்டம், வாடிக்கையாளர்களின் மாறும் தேவைகளுக்கு ஏற்ப அரசுடைமையிலான வங்கியின் சேவைகளை நவீனப்படுத்தும் அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
புதிய BOC IT Solutions நிறுவனம், 1992ஆம் ஆண்டு வங்கியின் பணியாளர் தேவைக்காக நிறுவப்பட்டு 2007இல் நிறுத்தப்பட்ட BOC Management and Support Services (Pvt) Ltd நிறுவனத்தை மறுசீரமைத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
புதிய நிறுவனம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால் நிர்வகிக்கப்பட்டு, வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்பை (digital infrastructure) வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும்.





Leave a Reply