சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகள் வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தால் 2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சலுகைகளை பெறவில்லை என்பது கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சிங்கள செய்தித்தாளொன்றும் வெளியிட்டுள்ளது.

கணக்காய்வின் படி, தகுதியுடைய பல பயனாளிகள் வங்கிக் கணக்குகள் திறக்காததினால் பெற வேண்டிய சலுகைகளை இழக்க நேரிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

மேலும், இக்குறைபாட்டை சரிசெய்ய 2025 ஜூன் மாத இறுதி வரைச் செயல்படுத்த வேண்டிய பொருத்தமான ஒரு பொறிமுறையை நலன்புரி நன்மைகள் சபை உருவாக்கவில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும திட்ட விதிகளுக்கு இணங்க, பயனாளிகளுக்கு பலன்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கணக்காய்வு அறிக்கை பரிந்துரைக்கிறது.

வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளிகளுக்கு கணக்குகள் திறக்கும்படி பலமுறை அறிவித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் கணக்குகள் இல்லாத காரணத்தால் சலுகைகளைப் பெற முடியாமல் உள்ளனர்.

இந்த அனைத்து விவரங்களும், நலன்புரி நன்மைகள் சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்