காங்கோ ஜனநாயகக் குடியரசும் உகாண்டாவும் மையமாகக் கொண்டு பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. குறிப்பாக “புண்டிபூக்யோ” எனப்படும் அரிதான எபோலா வைரஸ் வகை தற்போது வேகமாகப் பரவி வருவதால் உலக நாடுகள் அதிக கவனத்தில் உள்ளன. இதுவரை 80-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் 200-க்கும் அதிகமான சந்தேக நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது நேரடி சிகிச்சையோ இல்லாததால் மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காங்கோவின் இடூரி மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தலைநகரங்கள் வரை நோய் பரவியுள்ளமை காரணமாக மேலும் பல நாடுகளுக்கு இது பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உடல்திரவங்கள் மூலம் பரவக்கூடியதால் மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக நாடுகள் உடனடி மருத்துவ மற்றும் நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





Leave a Reply