சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலான காலத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். மொஸ்கோ அருகிலுள்ள ரியாசான் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய பாதுகாப்புத்துறை, 24 மணி நேரத்தில் 500-க்கும் அதிகமான உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளது. அதேவேளை இந்த தாக்குதல் அண்மையில் கீவ் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மொஸ்கோ வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் பல ட்ரோன்களை தடுத்தபோதிலும் சில தாக்குதல்கள் முக்கிய இலக்குகளை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரஷ்யா – உக்ரைன் போரில் மேலும் தீவிரமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டதூர தாக்குதல்கள் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்