உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் மொஸ்கோவை நோக்கி உக்ரைன் மேற்கொண்ட ஆழமான ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ரயசான் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தை நோக்கிச் சென்ற சீனாவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றும் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். கருங்கடல் பகுதியில் வெளிநாட்டு கொடிகளின் கீழ் பயணித்த பல சரக்கு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் இது சர்வதேச வர்த்தக பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து அணு ஆயுத பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ள நிலையில் நேட்டோ நாடுகளும் இந்த நிலவரத்தை நெருக்கமாக கவனித்து வருகின்றன.













Leave a Reply