பிரான்சில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டின் 54 துறைகள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் வெப்பநிலை 43°C வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிக்க ஆறுகள் ஏரிகள் மற்றும் அனுமதியற்ற நீர்நிலைகளில் குளிக்கச் சென்றவர்களில் கடந்த சில நாட்களில் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1,300க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் ரோம் மிலான் உள்ளிட்ட பல நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்துடன் கூடிய கடுமையான புயல்கள் மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் அபாயமும் எச்சரிக்கப்பட்டுள்ளது
































