சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இணையத்தின் மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்தும் GovPay திட்டத்தின் மூலம், 2025 ஏப்ரல் மாதம் அறிமுகமானதிலிருந்து இதுவரை 21,600-க்கும் மேற்பட்ட ஆன்லைன் அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூபா 2.8 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமை (ICTA) தெரிவித்துள்ளது.

இத்திட்டம் நாட்டுமுழுவதும் விரிவடைந்து வருவதாகவும், மக்கள் தங்கள் அபராதங்களை வேகமாகவும், வெளிப்படையாகவும், திறம்படவும் செலுத்திக்கொள்ளும் வசதி இதன் மூலம் மூலம் கிடைப்பதாகவும் ICTA கூறியுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ், இலங்கை போலீஸ் மற்றும் LankaPay (பி.வி.டி) லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து GovPay செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் இனி போலீஸ் நிலையம் அல்லது வங்கிகளுக்கு செல்வதின்றி ஆன்லைனில் நேரடியாக அபராதம் செலுத்த முடிகிறது.

முதலில் குருநாகல், அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சோதனை திட்டமாக அறிமுகமான GovPay, மேற்கு மாகாணம், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சமீபத்தில் தெற்கு மாகாணம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ICTA தெரிவித்ததாவது, இந்த வருமானம் மக்கள் டிஜிட்டல் கட்டண முறைகளில் நம்பிக்கையை காட்டுவது, இலங்கையின் பொது சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி வெற்றிகரமாக முன்னேறுவதை வெளிப்படுத்துகிறது.

GovPay திட்டம் வரும் மாதங்களில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் முழுமையாக இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் மக்கள் ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதியைப் பெற முடியும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்